போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கொள்ளை போன லட்ச ரூபாய்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (17:25 IST)
ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகே ஃபோட்டோ ஸ்டூடியோவில், லட்ச ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகில் ஃபோட்டோ ஸ்டுடியோ  நடத்தி வருபவர் ராகாமுகமது. நேற்று இரவு தன்னுடைய பணிகளை முடித்து கொண்டு ஸ்டூடியோவை மூடிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

இன்று காலை தன்னுடைய ஸ்டூடியோவின் வழியாக ராகா முகமது நடைபயிற்சி சென்றார். அப்போது ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஸ்டூடியோவின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த டிஜிட்டல் கேமரா, 10 சவரன் தங்க நகை, ரூ 1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

பின்பு அருகிலுள்ள ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைவில் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் நிலையம் அருகிலேயே இவ்வாறு லட்ச ரூபாய் திருடுபோன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்