தடுப்பூசி போட்டா பெட்ரோல் இலவசம் - எங்கு தெரியுமா??

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:43 IST)
கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது. 
 
இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த அம்மாவட்ட கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை பாராட்டினார். மக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்