21வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (07:49 IST)
சென்னையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 21வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்களை இந்திய நிறுவனங்கள் வாங்கிக் குவிப்பதால் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் மத்திய அரசு வரியை குறைத்தது போல் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்