இன்று தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்று மாலையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொங்கல் வரையிலுமே நீடிப்பதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததோடு, இன்று பொங்கல் நாளிலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் இன்று மாலை, இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K