சட்டப்பேரவையில் தனிநபர் தாக்குதல் - ராமதாஸ் கண்டனம்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (14:28 IST)
தமிழ சட்டப் பேரவையில் தனிமனித தாக்குதல் அதிக அளவில் உள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப் பேரவையில் விவாதங்கள் என்ற பெயரில் மோதல்களும், தனிநபர் தாக்குதல்களும் அதிக அளவில் உள்ளது. இந்த போக்கு மிகுந்த கவலையளிக்கின்றன.
 
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இதற்காகத் தான் இரண்டு கட்சியினரையும் சட்டப்பேரவைக்கு மக்கள் அனுப்பி வைத்தார்களா? என்ற வினா எழுகிறது.
 
மேலும், கச்சத்தீவு  கருணாநிதி ஆட்சியில்தான் தாரை வார்க்கப்பட்டது என்பதும், கச்சத்தீவை மீட்கும் வரை ஓய மாட்டேன் என்று 15.08.1991 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய ஜெயலலிதா பேசவில்லையா? இதற்காக ஜெயலலிதா என்ன செய்தார்?
 
இரு தரப்பின் மீதும் தவறு உள்ள நிலையில், அவை மறைத்துவிட்டு எதிர்தரப்பினர் மீது மட்டும் புகார்களைக் கூறி அவை நடவடிக்கைகளை முடக்குவது ஆரோக்கியமான செயலாக இருக்க முடியாது.
 
தமிழகத்தில், அதிமுகவும், திமுகவும் இருக்கும் வரை அரசியலில் நாகரீகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உண்மை சட்டப்பேரவையில் நிரூபணம் ஆகியுள்ளது.
 
ஆகவே, அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் ஓரளவாவது அவை நாகரீகம் இருக்கும். ஆனால், அதை செய்ய முதல்வர் ஜெயலலிதா முன்வரவில்லை.
 
எனவே, அவை நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து விவசாதம் செய்து, தீர்ப்பது வைக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்