சென்னையில் பொங்கல் விழா: முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:37 IST)
முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் அப்போது பொதுமக்கள் அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி எடுத்துக் கொள்கின்றனர் இந்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பொங்கல் திருவிழா நடைபெற்ற போது அதில் தலைமை தாங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் 
 
அப்போது பொதுமக்கள் தமிழக முதல்வருடன் இணைந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் பொதுமக்களுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்