இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு சென்று போட்டிகளை நேரடியாக கண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடுவதில் போட்டி ஏற்பட்டு, இருவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது, இது பிரச்சனையாகி இருவரும் மாறி மாறி கத்திக்குத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.