ஐஆர்சிடிசி வலைதளம் திடீரென முடங்கியதாகவும், அந்த தளத்தை பயன்படுத்த முயன்ற பயணிகளுக்கு "பராமரிப்பு பணி காரணமாக சேவை பெற முடியாது. மீண்டும் முயற்சிக்கவும்" என்ற மெசேஜ் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பராமரிப்பு பணி குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் எந்த அப்டேட்டும் இதுவரை பயணிகளுக்கு வழங்கப்படவில்லை.
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்க பயணிகள் குவிந்து வருவதாக தெரிகிறது. மேலும், வலைதளம் மட்டும் இன்றி மொபைல் செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று பயணிகள் குற்றம் கூறி வருகின்றனர். இது குறித்து விரைவில் ஐஆர்சிடிசி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.