நாங்குநேரியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்! அம்பலத்தில் அம்பலமான பணப்பட்டுவாடா!

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (17:26 IST)
நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த பணத்தை பொதுமக்கள் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்குநேரி பகுதியில் பல கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நாங்குநேரி பகுதிகளில் சட்டவிரோதமாக ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரம் இல்லாததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் பகுதியில் ஒரு வீட்டில் ஓட்டுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அங்கு விரைந்த பொதுமக்கள் அங்கு பணம் இருப்பதை கண்டுபிடித்ததோரு அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அங்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, இவற்றை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்