பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை என மரக்காணம் அருகே பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்திற்கு ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கழிக்குப்பம் என்ற பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்புகள் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ரேசன்கடை ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.