ரூ.6000 நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

Mahendran

புதன், 10 ஜனவரி 2024 (14:21 IST)
ரூபாய் 6000 நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என ஒட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவை துப்பாஸ்பட்டி என்ற கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மழை வெள்ள பாதிப்பு குறித்து சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்ய எம்எல்ஏ சண்முகையா துப்பாஸ்பட்டி என்ற கிராமத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் தங்களுடைய கிராமத்தில் உள்ள யாருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை என்றும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 
 
இதனை அடுத்து பொதுமக்களுடன் எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென எம்எல்ஏ வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை கலைத்து எம்எல்ஏவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்