இலசத்தால் மக்களை ஏமாற்றுகிறார்கள் - சீமான் விமர்சனம்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (23:28 IST)
மக்களை இலவசத்தால் ஏமாற்றுகிறார்கள் என நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைதுக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்று பேசிய சீமான் திராவிட கட்சிகளை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஒரு ரூபாய் கூட கொடுத்து அரிசி வாங்க முடியாத அளவுக்கு மக்களை இலவசத்தால் ஏமாற்றுகிறார்கள்.மக்களை அடிப்படை தேவைகளை வாங்க வேண்டிய நிலைக்கு உருவாக்க வேண்டும். கவர்ச்சி திட்டங்கள் கூறி மக்களை ஏமாற்ற நாங்கள் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படு என திமுகவும், அதிமுக கட்சி ரூ.1500 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்