ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (19:17 IST)
கடந்த ஆண்டு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் வருகையைத் தவிர்ப்பதற்கான பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கும்பகோணம், விருதாச்சலம், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் , புதுச்சேரி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்