இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மொத்தம் 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் 23 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.