அரசியல் விலகலுக்கு எதிராக சசிகலா வீட்டு முன்னர் தொண்டர்கள் போராட்டம்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (16:08 IST)
சசிகலா  அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் தொண்டர்கள் அவர் வீட்டு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா தனது முடிவை திரும்ப பெறவேண்டும் என அவரது வீட்டு முன்னர் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்