இப்ப சான்ஸ் கிடைக்கலைனா உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு! – நிர்வாகிகளுக்கு எடப்பாடியார் அட்வைஸ்!

வியாழன், 4 மார்ச் 2021 (11:51 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக இன்று ஒரேநாளில் அனைத்து விருப்பமனுதாரர்களுக்கும் நேர்க்காணல் நடத்த உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்றுடன் மனு அளித்தல் முடிவடைந்த நிலையில் சுமார் 6800 பேர் விருப்ப மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களிடம் இன்று ஒரே நாளில் நேர்க்காணல்களை நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேர்க்காணல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “சட்டப்பேரவையில் சீட் கிடைக்காவிட்டால் மனுதாரர்கள் ஏமாற்றம் கொள்ள வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்புகள் அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்