பாஜக மாநில தலைவர் அண்ணாமலையா? ஆளுனர் ரவியா? பண்ருட்டி ராமச்சந்திரன் கேள்வி..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (12:14 IST)
தமிழக பாஜகவின் தலைவராக இருப்பது அண்ணாமலையா? அல்லது ஆளுநர் ரவியா? என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் ரவி கடந்த சில மாதங்களாக அரசியல் பேசி வருகிறார் என்பதும் அவரது பேச்சுக்களை சர்ச்சைக்குரியதாக அரசியல் கட்சியினர் மாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாஜகவுடன் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜகவை விமர்சனம் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் யார் என்பதுதான் போட்டியாக உள்ளது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். 
 
அண்ணாமலை பேச வேண்டியதை ஆளுநரும், ஆளுநர் ரவி பேச வேண்டியதை அண்ணாமலையும் பேசுகின்றனர் என்றும் அதனால் தமிழக பாஜகவின் மாநில தலைவர் யார் என்பது குழப்பமாக இருப்பதால் அதை பாஜக மேலிடம் தான் தெளிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்