தமிழகம் முழுவதும் 18 சிறைச்சாலைகளை மூட உத்தரவு? என்ன காரணம்?

Prasanth Karthick
வெள்ளி, 26 ஜூலை 2024 (09:43 IST)
தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 18 கிளை சிறைச்சாலைகளை மூட சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.



தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகள், விசாரணை கைதிகளை அடைத்து வைக்க 9 மத்திய சிறைச்சாலைகள், 5 மகளிர் சிறைச்சாலைகள், 14 மாவட்ட சிறைச்சாலைகள், 106 கிளை சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பல சிறைச்சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டவை. இதில் சில பழுதடைந்து பாதுகாப்பற்றதாக உள்ளது.

இவ்வாறாக பழுதடைந்த நிலையிலும், போதிய வசதிகள் இல்லாமலும் உள்ள சிறைச்சாலைகளை மூட உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், கடலூர், பரமத்தி வேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 18 கிளைச் சிறைச்சாலைகளை மூடவும், அங்குள்ள கைதிகளை மாவட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பழுதடைந்த சிறைச்சாலைகள் இடிக்கப்பட்டு புதிய கிளைச்சிறைச்சாலைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்