கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் அடித்தாலும், இரவில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் இன்று இரவு சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.