வடகிழக்கு பருவமழை தீவிரம்: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (08:09 IST)
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இன்று அதிகாலை திடீரென சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பல இடங்களில் பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கனமழை முதல் மிக கனமழை வரை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் இந்த மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த மூன்று மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்