குடை ரெடியா? தொடங்கியது மழை சீசன்! – 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சனி, 29 அக்டோபர் 2022 (08:12 IST)
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரமாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்