தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.! கடும் வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை..!

Senthil Velan
திங்கள், 6 மே 2024 (13:57 IST)
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் நாளையும் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ALSO READ: கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் பலி..! குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
 
வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் எனவும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அலை வீசும் எனவும், கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்