கீழே உட்கார வைத்து அவமதித்த எடப்பாடி: அதிருப்தியில் ஓபிஎஸ்!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (13:18 IST)
தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் வருகை புரிந்தனர்.


 
 
இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
நேற்று நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிச்சாமி மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேடையில் இடம் ஒதுக்காமல் மேடைக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமைச்சர்களுடன் அமர வைக்கப்பட்டிருந்தார்.
 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று டெல்லி சென்ற அவர் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து தனது அதிருப்தியை தெரிவிக்க அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார். ஆனால் பிரதமரை சந்திக்க ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கப்படாததால் மேலும் அப்செட்டில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்