வளரும் நட்சத்திரம் பன்னீர்செல்வம் – சிகாகோவில் விருது பெற்ற ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (11:23 IST)
தமிழக துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஒ. பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற கருத்தரங்குகளில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கு “ஆசியாவின் வளரும் நட்சத்திரம்” என்ற விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக சிகாகோ தமிழ்சங்கம் சார்பில் ”தங்க தமிழ் மகன்” என்ற விருதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு விருதுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றிருப்பது அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்