நீட் தேர்வை ரத்து செய்ய குழு எதற்கு? நேரடியாக தீர்மானம் போடலாம்! – ஓபிஎஸ் வேண்டுகோள்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (17:38 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழக அரசு குழு அமைப்பது குறித்து எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், முன்னதாக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்பு குறித்து ஆராய குழு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல, நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய குழு எதற்கு? சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்