மாணவர்களுக்கு ஆன்லைன் வழி சேர்க்கை !

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (21:27 IST)
அரசுக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வழியாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி இயக்கத் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கடந்தாண்டு  41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை அதனால் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது மாணவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்