ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல்: கவர்னர் அனுமதி அளிப்பாரா?

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (15:45 IST)
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நாளை ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் தமிழக அரசு ஆன்லைன் அம்மி தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். 
 
இந்த நிலையில் நாளை மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் நாளை சட்டமன்றத்தில் கவர்னர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த பதில்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இம்முறை தாக்கல் செய்யப்படும் சட்டத்திற்கு கவர்னர் அனுமதி அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்