குழந்தைகளிடம் கேட்கும் கேள்வியா அது? ஆன்லைன் தேர்வில் சர்ச்சை கேள்வி!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (12:29 IST)
ஆன்லைனில் நடத்திய தேர்வு ஒன்றில் சாதி பாகுபாடு குறித்து தவறான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படுகின்றன. இதுமாதிரி சிபிஎஸ்சி சிலபஸில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கேட்கப்பட்ட கேள்வி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது சமம்ந்தமாக அந்த மாணவனின் பெற்றோர் சமூகவலைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அந்த கேள்வி என்னவென்றால் என்ன வகையான பொருட்களைக் கொண்டு தலித் மக்களின் வீடுகள் கட்டப்படுகின்றன?

அந்த கேள்விக்கான ஆப்ஷன்களாக செங்கற்கள், மண் மற்றும் வைக்கோல், பிளாஸ்ட்ரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பலரும் இந்த கேள்விக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்