அது என்ன கொரோனா வார்டா? இல்ல லவ்வர்ஸ் பிளேஸா? காதலனை கணவர் என பொய் சொன்ன பெண்!

வெள்ளி, 17 ஜூலை 2020 (12:15 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப் படுத்துதல் வார்டில் ஒன்றாக இருப்பதற்காக தனது காதலனை கணவன் என பொய் சொல்லியுள்ளார் ஒரு பெண்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பெண் காவலர் ஒருவருடன் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் பணியாற்றிய அனைவரும் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் காவலர் ஒருவர் தன்னுடையை கணவர் அஞ்சல் துறையில் பணிபுரிவதாக சொல்லி அவரையும் தனிமைப்படுத்த சொல்லியுள்ளார்.

இதையடுத்து அந்த நபரும் கொரோனா தனிமை வார்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணின் கணவர் இல்லை என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரியவந்துள்ளது. கணவரை 3 நாட்களாக காணாத அவர் மனைவி போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பின் கணவர் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்ற போது அவருக்கு பெண் காவலருக்கும் உள்ள காதல் தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார்.

இது சம்மந்தமாக உயர் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரும் வேறு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட பெண் காவலர் வார்டி ஒன்றாக இருக்க வேண்டுமென்று காதலனை கணவர் என பொய் சொல்லியுள்ளார். இந்த சம்பவமானது அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்