ஆகஸ்டு 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்! – பேராசிரியர்கள் கல்லூரி வர உத்தரவு!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:46 IST)
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள் கல்லூரி வர உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.

அதை தொடர்ந்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள உயர்கல்வி துறை ஆகஸ்டு 9 முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவித்துள்ளது. மேலும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகஸ்டு 9 முதல் கல்லூரிகளுக்கு நேரடியாக செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்