எஸ்.ஆர்.எம் சார்பாக நடைபெற்ற பொருள் வேதியியலில் சமீபத்திய வளர்ச்சி சர்வதேச மாநாடு

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (17:59 IST)
பத்திரிகைச் செய்தி:  எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறைசார்பாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல்  16ம் தேதி வரை பொருள் வேதியியலில் சமீப வளர்ச்சி என்னும் தலைப்பிலான இரண்டாவது சர்வதேச மாநாடு மாற்று சக்தி மற்றும் அணு ஆற்றல் ஆணை  குழு. பிரான்ஸ் மற்றும் ஐ,ஆர்,டி இந்தியா அமைப்புகள் இணைந்து காட்டாங்குளத்தூரில் நடத்தின.
இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 11 தொழில் நுட்ப அமர்வுகளின் கீழ் வழங்கப்பட்டன, இம்மாநாட்டுக்கு பிரான்ஸ், ஜெர்மனி,  தென்கொரியா, தைவான், சீனா, அமொரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டன.
 
இம்மாநாட்டின் சஞ்சிகை பங்காளராக மெட்டீரியல்ஸ் டுடே(எல்ஸ்வியர்) சஞ்சிகை உள்ளது,  சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான  விருதுகள் வழங்கப்பட்டன,
 
துவக்கவிழா பிப்ரவரி 14ம் நாள் முனைவர் டி,பி, கணேசன் அரங்கம, எஸ்,ஆர்,எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூரில்  நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் வீரேந்தர் சிங் சௌகான், தலைவர், தேசிய அங்கிகார மதிப்பீட்டு குழு (NAAஊ) கலந்துகொண்டு மாநாட்டைத்  துவக்கிவைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார்.
எஸ்,ஆர்,எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தின் வேந்தர் முனைவர் தா.இரா.பாவேந்தர் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.   அறிவியல் புல முதல்வர்முனைவர் தா ஜான் திருவடிகள், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார். மாநாட்டின் அமைப்பாளர் முனைவர் ம.அர்த்தநாரீஸ்வாரி வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. அனந்தநாராயணன் நன்றி நவின்றார். இம்மாநாட்டில் சர்வதேச  பேச்சாளர்கள் பேராசிரியர் சாங்கர்ராஜு சண்முகம் (தென் கொரியா), பேராசிரியர் இங்க் ஜென்ஸ் ஹூசைன் (ஜெர்மனி), மஜ்தி ஹோசலாவ் (பிரான்ஸ்),  முனைவர் டேவிட் அடிசியோ, முனைவர் எட்மண்ட் கிரேவல், முனைவர் எரிக் டோரிஸ், முனைவர் பிரடெரிக் டரன்(பிரான்ஸ்), முனைவர் கிரிகோரிபீட்டர்ஸ்  (பிரான்ஸ்), முனைவர் ரங்கராஜு சண்முகம் (தென்கொரியா), முனைவர் பா,சந்திரசேகரன், இயக்குநர் தேசியதோல் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை)  உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 
இம்மாநாட்டின் வெற்றிக்கு இந்திய பிரதம அமைச்சர், இந்தியத்துணைக் குடியரசுதலைவர் ஆகியோர் வாழ்த்துசெய்தி அனுப்பியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்