இந்நிலையில், தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய தினகரன் “ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றவுடனே புதிய கட்சியை தொடங்கியிருக்க முடியும். ஆனால், எம்.ஜி.ஆரின் உருவாக்கி கட்சி விதிகளின் படி, ஒருவர் புதிய கட்சியை தொடங்கினால், அவரின் அடிப்படை உறுப்பினர் தகுதி இழக்கிறார். எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இது சிக்கலை உருவாக்கும்” எனக் கூறினார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஆர்.கே.நகரில் இரட்டை இலை தோல்வி அடைந்ததற்கு ஓ.பி.எஸ்-தான் காரணம். அவரது சுயநலத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. எந்த தினகரனால் ஜெ.விடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வராக ஆக்கப்பட்டாரோ அதே தினகரனால் அவர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார். பழைய தொழிலுக்கு அவர் செல்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்வேன்” என கிண்டலாக குறிப்பிட்டார்.