தனக்குத்தானே பிரசவம்.. குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் கைது

Siva
ஞாயிறு, 5 மே 2024 (08:57 IST)
சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது, குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 30ம் தேதி, வினிஷா என்ற செவிலியர் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் இரண்டு கால்களை வெட்டி எடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து செவிலியர் வினிஷா சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினிஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக சென்னையை சேர்ந்த செவிலியர் ஒருவர் திருமணமாகாமல் கர்ப்பமான நிலையில் குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்த போது எதிர்பாராத வகையில் அந்த குழந்தை பலியானதாக கூறப்பட்டது.மேலும் செவிலியர் கர்ப்பத்திற்கு காரணமான அவருடைய காதலரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது விசாரணையில் அவரே குழந்தையை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

Edited by Siva

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்