திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

Mahendran

புதன், 24 ஏப்ரல் 2024 (13:51 IST)
திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் எனவும், திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறைபனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது என்றும் உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம் என்றும், திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது என்றும், எனவே  ஸ்மோக் பிஸ்கட் ஆபத்தை உணர்ந்து கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சமீபத்தில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை ஒன்று திடீரென வயிற்றை பிடித்துக் கொண்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் பஞ்சுமிட்டாய் போலவே ஸ்மோக் பிஸ்கட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வளர்த்து வருகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்