2026ஆம் ஆண்டு திராவிட கட்சிகள் இல்லாத கூட்டாட்சி: அண்ணாமலை நம்பிக்கை

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:38 IST)
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு திராவிட கட்சிகள் இல்லாத கூட்டாட்சி ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த அண்ணாமலை அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காமராஜர் ஆட்சிக்குப் பிறகு எல்லா இடத்திலும் ஊழல் எட்டிப் பார்க்கிறது என்றும் திராவிட கட்சிகள் இல்லாமல் பாஜக ஆட்சிக்கு வரும் போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஒரு கூட்டணியை உருவாக்கினோம், 2026 ஆம் ஆண்டு திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்கி ஆட்சியை பிடிப்போம் என்று கூறினார்.

மேலும் இன்று நடந்த தமிழக பாஜக கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பதும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று தங்கள் அறிவுரைகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்