இந்த நிலையில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இருப்பதற்கு முதல் காரணமே திமுக, பாஜகவை எதிர்க்கிறது என்பதற்காக தான். இந்த நிலையில் திமுக தனது நிலையில் இருந்து மாறுபட்டால் கூட்டணி கட்சிகள் வெளியேற தயாராகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழக மக்களை புறந்தள்ளுதல் என்ற மாறாத அரசியல் குணம் கொண்ட பாஜகவோடு திமுக இணக்கமாக செல்லும் நிலை இப்போதைக்கு இல்லை. அதற்கான சூழலும் இல்லை. ஒருவேளை திமுக - பாஜக கூட்டணி வந்தால் பாஜகவோடு யார் சேர்ந்தாலும் அந்த அணியை எதிர்க்கிற அணியில்தான் நாங்கள் இருப்போம் என கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.