லீக்கான வினாத்தாளில் உள்ள கேள்விகள் தேர்வில் கேட்கப்படாது - அன்பில் மகேஷ்1

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (12:45 IST)
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.  10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இன்று 12 ஆம் வகுப்பிற்கான கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று அதன் வினாத்தாள்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்டது. மேலும், வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்