மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் காச நோய், கல்லீரல் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான், இருமல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத பெற்றோர், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி எந்த தடுப்பூசியை செலுத்தவில்லையோ, அந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்திக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியுள்ளார்.