நீட் பற்றி பேச அனுமதி மறுப்பு.. மக்களவையில் திமுக வெளிநடப்பு!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (11:51 IST)
நீட் தேர்வு விலக்கு ஆளுனர் காலதாமதம் குறித்து பேச மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்க மசோதா உள்ளிட்டவற்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தாலும், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் அவை கிடப்பில் உள்ளன. ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கோரி அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். மக்களவை தொடங்கிய நிலையில் ஆளுனர் மீதான தீர்மானம் மீது விவாதம் நடத்த திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்