இரட்டை இலை சின்னத்தை நீதிமன்றம் சென்று மீட்போம். டிடிவி தினகரன்

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (23:50 IST)
சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக ஆகிய இரு அணியினர்களின் வாதங்களை கேட்ட தேர்தல் ஆணையம் இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிமுக என்ற கட்சியின் பெயரையும் இரு அணிகளும் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் கடந்த 89ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 


தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவு காரணமாக ஆர்.கே.நகரில் தற்போது டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகிய இருவருமே சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு குண்டு பல்பு, துடைப்பம், தென்னை மரம் போன்ற ஏதாவது ஒரு சுயேச்சை சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும், ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.,

 
அடுத்த கட்டுரையில்