அண்ணாமலையை மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கை வைக்கவில்லையும்- எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (12:39 IST)
அதிமுக- பாஜக இடையே  கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக இடையே கூட்டணி தொடருமா எனக் கேள்விகள் எழுந்தன.

இதையடுத்து,சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது,  அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இதுபற்றி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, 'பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், எந்தப் பிரச்சனையையும் சந்திக்க தயார்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு’’ என்று கூறினார்.

மேலும், ‘’பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ அல்லது நட்டாவோ அதிமுகவுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை… அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என எங்களிடம் பாஜக கோரிக்கை வைக்கவில்லை. அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என நாங்களும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்