அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்த தேதியிலா?

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (20:05 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
உச்ச  நீதிமன்ற தீர்ப்புக்கு பின், ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமெடுத்தன. எனவே அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்   நாட்டு விழாவில்  பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்  ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக பலரும் நகை, பணம் என நன்கொடை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ராமர் கோவில் கட்டுமான பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என கட்டுமான குழுவின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனவரி 22 ஆம் தேதி முதல் ஜனவரி 24 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்