நீலகிரியில் கொரோனா பாதித்தவர்களை சிகிச்சை அளிக்க சென்றவர்களை சிலர் அரிவாள், கம்புடம் சுற்றி வளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
நீலகிரி மாவட்டம் புத்தூர்வயல் பழங்குடியின கிராமத்தில் குழந்தைகள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களை மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க சுகாதார பணியாளர்கள் ஆம்புலன்ஸில் புத்தூர்வயல் சென்றுள்ளனர்.
அங்கு கையில் அரிவாள், கம்புடன் சுற்றி வளைத்த சிலர் சுகாதார பணியாளர்கள் கிராமத்திற்குள் செல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். தகவலறிந்த போலீஸார் வந்து சமாதானம் செய்ய முயன்றும் மக்கள் முரண்டு பிடித்ததால் இறுதியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.