தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் முன்பு வெளியாகிவந்த எண்ணிக்கையை விட இப்போது அதிகளவில் ஆடியோ அதிகமாகியுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியான ஆடியோவில் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது தொண்டர்கள்தான் கட்சி என்று ஆரம்பித்தார். நான் சீக்கிரம் வருவேன். நான் எல்லா தொண்டர்களையும் சந்திப்பேன். ஒவ்வொரு ஒன்றியம், நகரம் என எல்லாப் பகுதிகளுக்கும் வருகிறேன். எல்லாவற்றையும் மாற்றி அம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே மாற்றுகிறேன் எனக் கூறியுள்ளார்.