தமிழ்நாட்டில் மீண்டும் என்ஐஏ சோதனை.. 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை என தகவல்..!

Mahendran
சனி, 10 பிப்ரவரி 2024 (09:16 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பதும் குறிப்பாக நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்தனர் என்பதும் தெரிந்தது. 
 
அதன் பின்னர் நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நெல்லை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படுபவர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த சோதனை என்பது கோவை, சென்னை, நெல்ல்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட நடந்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்