33 மாத ஆட்சியில் ஒப்பந்தங்களின் மூலம் 8.65 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு

Sinoj

வியாழன், 8 பிப்ரவரி 2024 (19:06 IST)
கடந்த 33 மாத ஆட்சியில் பல்வேறு  ஒப்பந்தங்களின் மூலம் 8.65 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
சென்னையில், திமுக அரசின் பிரமாண்டமான முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், சமீபத்தில், ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்திவிட்டு, சென்னை திரும்பினார்.

இதையடுத்து, சொன்னதை நிறைவேற்றித் தரும் தமிழ்நாடு! என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு  கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், ''ஸ்பெயினில் மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாக 3,440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘’கடந்த 33 மாத ஆட்சியில் பல்வேறு  ஒப்பந்தங்களின் மூலம் 8.65 கோடி ரூபாய் முதலீட்டுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்  அமைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ் நாடு செயல்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்