அனைத்து யூட்யூப் வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும்: சாட்டை துரைமுருகனுக்கு உத்தரவு..!

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (13:02 IST)
பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து சாட்டை துரைமுருகன் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட  அனைத்து வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஆன சாட்டை துரைமுருகன் வீட்டில் சமீபத்தில் என்.ஐ.ஏ.  அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவர் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது 
 
இந்த சம்மனை ஏற்று சாட்டை துரைமுருகன் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார் என்பதும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். 
 
இதன்படி சாட்டை துரைமுருகன் தனது யுடியூப் பக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து வெளியிட்டு வந்த அனைத்து வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து விரைவில் தனது யூடியூபில் உள்ள அனைத்து வீடியோக்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்