பிப்ரவரி 1 முதல் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (14:01 IST)
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய பெருங்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கன்னியாகுமாரி திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்