வங்க கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்! – எந்த பக்கம் நகர்கிறது?

திங்கள், 30 ஜனவரி 2023 (12:04 IST)
இன்று வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் எந்த பக்கம் நகரும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் காற்றழுத்த சுழற்சியால் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 1ம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்