புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு போனில் பேசிய புதுமாப்பிள்ளை பலி ! பகீர் சம்பவம்

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (20:49 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரி என்பவருட்ம திருமணம் நடைபெற்றது. 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்ன சண்முக சுந்தரி, தன் தாயின் வீட்டுக்கு சென்றதாகத் தெரிகிறது. அதனால் நேற்று இரவில் கடையில் புரோட்டா வாங்கிவந்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
 
அப்போது அவரது மனைவி,சண்முக சுந்தரி அவருக்கு போன் செய்துள்ளார். செல்போனை ஆன் செய்து அவர் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த போது, சூடான புரோட்டா தொண்டையில் சிக்கிக்கொண்டது. பின்னர் அவரால் குரல் எழுப்பு பேச முடியவில்லை.  இதனையடுத்து சண்முக சுந்தரி பதறியடித்து, கணவர் வீட்டினருகில் உள்ள உறவினர்களை சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
 
அவர்கள் பூட்டிய வீட்டில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, புருஷோத்தமன், உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, பாதி வழியிலேயே இறந்தார். தற்போது இந்த சம்பவம் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்